ரஷ்ய அணுகுண்டு தளம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் TU- 160 விமானம் பற்றி எரிந்தது !

ரஷ்ய அணுகுண்டு தளம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் TU- 160 விமானம் பற்றி எரிந்தது !
உக்ரைன் எல்லையில் இருந்து, மிகவும் நீண்ட தூரத்தில் உள்ள ரஷ்ய கிராமம் தான் சரட்டோ. இங்கே “என் -ஜெல்ஸ்” என்ற விமானத் தளம் உள்ளது. ரஷ்யாவின் மிகவும் பாதுகாப்பான ஒரு விமானத் தளம். ஏன் என்றால் இங்கே தான் ரஷ்யாவின் அதி சக்த்திவாய்ந்த TU-160 , TU-95, மற்றும் TU-22 ஆகிய போர் விமானங்கள் தரித்து நிற்க்கும். இவற்றில் அணு குண்டுகள் உள்ளது. உலகில் எந்த ஒரு நாட்டையும் விமானம் மூலம் தாக்க ரஷ்யா முடிவு செய்தால், இந்த விமானங்களை தான் பயன்படுத்த வேண்டி இருக்கும். இவற்றின் விலை சுமார் 130M மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.
நேற்றைய தினம்(19) அன்று இரவு, உக்ரைன் தயாரிப்பான, “கமிக்-காஷ்” ஆளில்லா விமானம் ஒன்று, மிகவும் ஆளமாக ஊடுருவிச் சென்று இந்த விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. கமிக் காஷ் விமானங்கள் என்பது, தற்கொலை விமானங்களே. அவற்றில் பெரும் அளவில் அதி சக்தி வாய்ந்த வெடி பொருட்கள் இருக்கும். இந்த தாக்குதல் காரணமாக பெரும் வெடிப்புச் சத்தம் கேட்டதாக அருகில் வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
எத்தனை ரஷ்ய விமானங்களை உக்ரைன் தகர்த்தது என்பது இதுவரை தெரியவில்லை. இருப்பினும் இவ்வாறு அணு குண்டுகள் உள்ள தளங்களை உக்ரைன் தாக்கும் வேளை அணு குண்டு ஒன்று வெடித்தால், உடனே ரஷ்யா உக்ரைன் மீது பாரிய அணு குண்டுத் தாக்குதல் ஒன்றை தொடுக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இதுவே 3ம் உலகப் போரை உடனே தோற்றுவிக்கும். தற்போது போலந்து மட்டும் அல்ல, சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளும், நேட்டோ படையணியோடு இணைந்துள்ள நிலையில். எந்த ஒரு நேட்டோ நாடு மீது ரஷ்யா தாக்கினாலும், உடனே எந்த ஒரு பார பட்சமும் பார்காமல் நேட்டோ உடனே ரஷ்யா மீது போர் தொடுக்கும். இதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. இதேவேளை போலந்து எல்லை, சுவீடன் எல்லை என்று, ரஷ்யாவின் அனைத்து எல்லைகளிலும் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ராணுவத்தை நேட்டோ நாடுகள் குவித்து வைத்துள்ளது.
நேட்டோ நாடுகளின் சக்த்தி என்பது உட்சபட்ச சக்த்தி ஆகும், இதில் அமெரிக்கா, இங்கிலாந்து பிரான்ஸ் ஜேர்மனி என்று பல சக்த்திவாய்ந்த நாடுகள் அங்கம் வகிக்கிறது. போர் என்று ஒன்று ஆரம்பித்தால் சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் எந்த ஒரு பக்கத்தையும் சார்ந்து நிற்காது. அது நடு நிலை வகிக்கும். இதனால் ரஷ்யா மிக மோசமாக தாக்கப் படலான் என்பது, ரஷ்யாவுக்கு நன்றாகத் தெரியும். இருப்பினும் புட்டின் போன்ற தற்போதைய தலைவர், சற்றும் மனம் தளராத அரக்கத்தனமான தலைவர்களாக இருக்கிறார்கள். இதனால் மோட்டுத் தனமான முடிவை அவர்கள் எந்த நேரமும் எட்டக் கூடும் என்ற நிலை காணப்படுகிறது. தற்போது ஏற்பட்டிருக்கும் இந்தச் சூழல், மிக மிக ஆபத்தான் ஒரு கட்டமாகும் !