சீக்ரெட்டாக இருக்கும் தனுஷ் 50 அப்டேட்… முதல் முறையாக வெளியான தகவல்!

சீக்ரெட்டாக இருக்கும் தனுஷ் 50 அப்டேட்… முதல் முறையாக வெளியான தகவல்!

தனுஷ் அடுத்து தனது 50 ஆவது படத்தை தானே இயக்கி மின்னல் வேகத்தில் ஷூட்டிங்கை முடித்தார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் தனுஷோடு எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அமலா பால் மற்றும் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.  இந்த படத்துக்காக மொட்டை அடித்து கெட்டப்பை மாற்றிய தனுஷ் மொத்த காட்சிகளையும் 110 நாட்களில் முடித்தார்.

இந்த படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் இப்போது நடந்து வரும் நிலையில் இந்த படத்தை ஏப்ரல் 12 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தின் தலைப்பாக ‘ராயன்’ என்று வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. படம் ஏப்ரலில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் ரிலீஸுக்கு சில வாரங்களுக்கு முன்னதாக டைட்டில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

இந்த படத்தில் தனுஷ் வடசென்னையை சேர்ந்த காத்தவராயன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் தனுஷ் ஒரு கேங்ஸ்டராக நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.