தேர்தலில் நிற்க சத்யராஜ் மகளுக்கு வலைவிரித்ததா பாஜக?

தேர்தலில் நிற்க சத்யராஜ் மகளுக்கு வலைவிரித்ததா பாஜக?

பிரபல நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து நிபுணராக இருந்து வருகிறார். ’மகிழ்மதி இயக்கம்’ என்ற அமைப்பை ஆரம்பித்து நடத்தி வரும் திவ்யா சத்யராஜ், இந்த இயக்கத்தின் மூலம் ஊட்டச்சத்து குறைந்த மாணவர்களுக்கு ஊட்டச்சத்து அளித்து வருவதாக தெரிவித்தார்.

தனக்கு அரசியலிலும் ஆர்வம் உள்ளதாகக் கூறியுள்ள அவர் கட்சி ஒன்றில் சேரப்போவதாக சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிவித்திருந்தார். ஆனால் இதுவரை எந்த கட்சியிலும் அவர் சேரவில்லை.

இந்நிலையில் அவரை பாஜக தங்கள் கட்சியின் சார்பாக கொங்கு மண்டலத்தில் எதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வைக்க அனுகியதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதை திவ்யா சத்யராஜ் மறுத்துவிட்டாராம். இதுகுறித்து பேசியுள்ள அவர் “என்னை ஒரு கட்சி அனுகியது உண்மைதான். ஆனால் எந்தவொரு மதத்தையும் போற்று கட்சியிலும் நான் இணைவதில்லை என உறுதியாக இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.