பிரபல அரசியல்வாதி நிவேதா பெத்துராஜுக்கு துபாயில் வீடு வாங்கி கொடுத்தாரா? அதிர்ச்சி தகவல்..!

பிரபல அரசியல்வாதி நிவேதா பெத்துராஜுக்கு துபாயில் வீடு வாங்கி கொடுத்தாரா? அதிர்ச்சி தகவல்..!

பிரபல அரசியல்வாதி ஒருவர் நடிகை நிவேதா பெத்துராஜுக்கு துபாயில் ரூபாய் 50 கோடி மதிப்பில் வீடு வாங்கி கொடுத்ததாக அரசியல் விமர்சகர் ஒருவர் தனது யூடியூப் வீடியோவில் கூறி இருக்கும் நிலையில் இது குறித்து நிவேதா பெத்துராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

ஒரு செய்தியை வெளியிடும் முன் அந்த செய்தியை உறுதிப்படுத்திக் கொண்டு வெளியிட வேண்டும் என்றும் நாங்கள் கண்ணியமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அந்த நபர் வெளியிட்ட செய்தியில் உண்மை எதுவுமில்லை என்றும் நிவேதா பெத்துராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் நாங்கள் பல ஆண்டுகளாக துபாயில் வாழ்ந்து வருகிறோம் என்றும் இப்போது கூட நாங்கள் வாடகை வீட்டில் தான் இருக்கிறோம் என்றும் யாரும் எங்களுக்கு வீடு வாங்கி கொடுக்கவில்லை என்றும் சிறிதேனும் மனிதாபிமானம் இருந்தால் இது போன்ற செய்திகளை இனிமேல் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து நாங்கள் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என்றும் நிவேதா பெத்துராஜ் கூறியுள்ளார். உங்கள் குடும்பத்தில் உள்ள பெண்கள் போலவே நானும் கண்ணியமான பெண்தான் என்றும் நான் என் வாழ்க்கையை அமைதியாக வாழ விரும்புகிறேன் எனவே தயவு செய்து ஒரு செய்தியை வெளியிடு முன் அந்த செய்தியை உறுதி செய்து கொள்ளும்படி பத்திரிகையாளர்களை நான் கேட்டுக்கொள்கிறேன் என்றும் எனக்காக குரல் கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றி என்றும் அவர் கூறியுள்ளார்.