ஷங்கரின் மகளின் 2ம் திருமணம் மும்முரமாக வேலை பார்க்கும் இயக்குனர் ஷங்கர் !

ஷங்கரின் மகளின் 2ம் திருமணம் மும்முரமாக வேலை பார்க்கும் இயக்குனர் ஷங்கர் !

அனைவராலும் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும், இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா 6 மாதத்தில் திருமணம் பிடிக்கவில்லை என்று கூறி வீட்டில் வந்து தங்கிவிட்டார். பின்னர் விவாகரத்தும் ஆகிவிட்டது. அதன் பின்னர் உதவி இயக்குனராக இருக்கும், தருண் கார்திகேயனை ஐஸ்வர்யாவுக்கு திருமணம் முடிப்பது என்று நிச்சயமாகியது. தற்போது படு பிசியாக கல்யான வேலைகளை கவனித்து வருகிறார் இயக்குனர் ஷங்கர்.

ஷங்கரின் இளைய மகள் அதிதி மருத்துவம் படித்து வருகிறார். இன் நிலையில் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் 2ம் திருமணத்தை மிகப் பிரம்மாண்டமாக நடத்தவேண்டும் என்பதே ஷங்கரின் ஆசையாம். இதனால் மனுஷன் தானே களத்தில் இறங்கி வேலைகளை செய்துவருவதாக கோடம்பாக்க வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐஸ்வர்யாவிற்கும், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்துக்கும் கடந்த 2022ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இதில் தமிழக முதல்வர் ஸ்டானில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். ஆனால் சில மாதங்களில் அவர்கள் பிரிந்துவிட்டார்கள். தற்போது தான் ஐஸ்வர்யா மீண்டும் திருமணத்திற்கு சம்மதித்துள்ளார். மகளின் வாழ்கை இப்படி ஆகிவிட்டதே என்று மிகுந்த கவலையில் இருந்த ஷங்கருக்கு தற்போது தான் ஒரு விடிவு காலம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளாராம்.