ஒரே மகளுக்கு ஏற்பட்ட சர்ச்சை.. போலீசில் புகாரளித்த மகேஷ்பாபு மனைவி..!

தனது மகள் பெயரில் போலி சமூக வலைதள கணக்குகள் பதிவு செய்து பண மோசடி செய்து வருவதாக மகேஷ்பாபுவின் மனைவி நர்மதா ஹைதராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவுக்கு சித்தாரா என்ற மகள் உண்டு. இவர் மகேஷ் பாபு நடித்த ஒரு திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் சமூக வலைதளத்திலும் இவர் ஆக்டிவாக இருக்கிறார்.

இந்த நிலையில் ஒரு சிலர் சித்தாரா பெயரில் போலியான சமூக வலைதள கணக்குகளை தொடங்கி அதிலிருந்து சிலருக்கு லிங்குகள் அனுப்பி பணம் மோசடியில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து தனது கவனத்திற்கு வந்த உடனே மகேஷ் பாபு மனைவி நர்மதா ஹைதராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

எனது மகள் பெயரில் போலி சமூக வலைதள கணக்கு ஆரம்பித்து மோசடி செய்பவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலியான லிங்குகள் கிளிக் செய்து பணத்தை அனுப்ப வேண்டாம் என்றும் நர்மதா கேட்டுக் கொண்டுள்ளார்.