லண்டனை பாருங்கள் முஸ்லீம் நாடாக மாறிவிட்டது அப்படி அமெரிக்காவை வர விட மாட்டேன் என்று ஏளனம் செய்த ரம் !

லண்டனை பாருங்கள் முஸ்லீம் நாடாக மாறிவிட்டது அப்படி அமெரிக்காவை வர விட மாட்டேன் என்று ஏளனம் செய்த ரம் !

பிரித்தானியாவைப் பாருங்கள், அது பிரித்தானியாவே அல்ல. அங்கே உள்ள இமிகிரேஷன் அதிகாரிகள் செய்த தவறு. இன்று அந்த நாடு ஒரு ஆங்கிலேயா நாடாகவே இல்லை. ஏதோ பாக்கிஸ்தான் போல காட்சி தருகிறது. அது போக ஐரோப்பிய ஒன்றியம் “ஜிகாட்டை” கை கூப்பி வரவேற்றுள்ளார்கள். கதவுகளைத் திறந்து ஜிகாட்டை வா வா என்று அழைக்கிறார்கள் ஐரோப்பிய நாட்டினர். அது போன்ற ஒரு பெரும் பிழையையை நான் அமெரிக்காவில் விடப்போவது இல்லை என்று, கடினமாக ஏளனம் செய்துள்ளார் டொனால் ரம்.

தனக்கு எதிராக நீதிமன்றில் நடக்கும் கிரிமினல் குற்ற வழக்கு தொடர்பாக அவர் மக்கள் மத்தியில் பேசியுள்ளதோடு. தேர்தல் பரப்புரை செய்யவும் ஆரம்பித்துவிட்டார். அவர் லண்டன் மேயர் சாதிக் கான்னையும் குத்திக் காட்ட தயங்கவில்லை. லண்டன் மேயராக சாதிக் கான் இருப்பதும். பிரித்தானியாவின் பிரதமராக ஒரு இந்திய வம்சாவளி,  நபர் இருப்பதையும், மிகக் கடுமையாக மறைமுகமாக விமர்சித்துள்ளார் ரம். இது பிரித்தானிய அரசை கடும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது, ஒரு புறம் இருக்க.

மீண்டும் அமெரிக்காவில் இன வெறியை ரம் விதைக்க ஆரம்பித்துவிட்டார். இலங்கையில் ராஜபக்சர்கள் எவ்வாறு இன வெறியைத் தூண்டி அதில் குளிர்காய்ந்து ஆட்சியை நடத்தினார்களோ , அதுபோல ரம் தற்போது ஆரம்பித்துவிட்டார். ஏற்கனவே அவர் தனது ஆட்சிக் காலத்தில் அதனைத் தான் செய்துகொண்டு இருந்தார். மீண்டும் ஆட்சியைப் பிடிக்க ரம் இனியும் இதனைத் தான் செய்யப் போகிறார். டொனால் ரம்பால் தான் அமெரிக்கா, அன்று தொடக்கம் இரண்டு பட்டுக் கிடக்கிறது.

Source : https://www.dailymail.co.uk/news/article-13374523/Donald-Trump-immigration-London-unrecognisable-jihad-sadiq-khan.html