மகன் பிறப்பில் சந்தேகம்…. DNA பரிசோதனை செய்த நடிகர் அபாஸ்!

மகன் பிறப்பில் சந்தேகம்…. DNA பரிசோதனை செய்த நடிகர் அபாஸ்!

ஒரு காலகட்டத்தில் பிரபல நடிகராக இருந்து வந்தவர் நடிகர் அப்பாஸ். இவர் குறிப்பாக 90 காலகட்டங்களில் நட்சத்திர நடிகராக ஜொலித்து வந்தார் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் அடுத்தடுத்து நடித்து மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்து வந்தார்.

தமிழில் படையப்பா, விண்ணுக்கும் மண்ணுக்கும், மலபார் போலீஸ், ஆனந்தம் , அழகிய தீயே உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். அப்பாஸ் பார்ப்பதற்கு இவர் பார்ப்பதற்கு மிகவும் பவ்யமாக சாக்லேட் பாயாக பெருவாரியான ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அப்பாஸின் காலம் ஒரு காலத்தில் ஓஹோ என ஓடியது. ஆனால், பின்னர் திடீரென மார்க்கெட் சரிந்து போனது.

இதனால் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் தவறவிடாமல் பணத்தேவைக்காக விளம்பரங்களில் நடித்தார். அதிலும் டாய்லெட் கிளீனர் விளம்பரங்களில் நடித்தது அவரது சினிமா கெரியரை மொத்தமாக மூடிவிட்டது.

இவர் எரும் அலி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தற்போது மனைவி பிள்ளைகள் என வெளிநாட்டில் சென்று செட்டில் ஆகிவிட்டார். அங்கு கிடைக்கும் தொழில் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் பேசிய அப்பாஸ் தனது மகன் குறித்து பல விஷயங்களை கூறினார்.

என் மூத்த மகன் ரொம்ப அமைதியானவர். அந்த வயதில் நான் ரொம்ப கூத்து கலாட்டா எல்லாம் பண்ணிட்டு இருந்தேன். ஆனால், என் மகன் அப்படி கிடையாது. ரொம்ப சிம்பிள், Mature-ஆக இருக்கிறார். அதனால் எனக்கே ஆச்சிரியப்பட்டேன், என்னுடைய மகனா என சந்தேகம் இருந்தது. பிறகு DNA செக் பண்ணும்போது என் பையன் தான்’ என கூறினார்.