பிரிட்டனில் லேபர் கட்சி பெருவாரியான வெற்றி 468 ஆசனங்கள் 27 கவுன்சிகளை முழுமையாக கைப்பற்றியது லேபர்

பிரிட்டனில் லேபர் கட்சி பெருவாரியான வெற்றி 468 ஆசனங்கள் 27 கவுன்சிகளை முழுமையாக கைப்பற்றியது லேபர்

பிரிட்டனில் நேற்று நடைபெற்ற கவுன்சில் தேர்தலில், எதிர்கட்சியான லேபர் கட்சி பெருவாரியான வெற்றிகளை பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக 468 ஆசனங்களை அது பெற்றுள்ளது. கடந்த தேர்தலிலும் பார்க்க 68 ஆசனங்களை அதிகம் பெற்றுள்ளது. இது போக, 27 கவுன்சில்களை முழுமையாக தனது கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துள்ளது. ஆளும் டோரிக் கட்சி, வெறும் 144 ஆசனங்களை கைப்பற்றியுள்ளதோடு, 141ஆசனங்களை இழந்துள்ளது. அதாவது..

கடந்த தேர்தலின் போது கைப்பற்றிய ஆசனங்களில் இருந்து 141 ஆசனங்களை அது இழந்துள்ளது. இதேவேளை 3வது பெரிய கட்சியான லிபரல் கட்சி, முன்னேறியுள்ளதோடு, 159 ஆசனங்களைப் பெற்றுள்ளதோடு 5 கவுன்சிகளை தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருக்கிறது. ஆளும் டோரிக் கட்சியிடம் வெறும் 3 கவுன்சிகள் மட்டுமே கட்டுப்பாட்டினுள் இருக்கிறது. இந்த தேர்தல் நிலவரம், இன்னும் வர உள்ளது.

மேலும் சில இடங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் நடந்து முடிந்த தேர்தலில் பிரிட்டம் மக்கள் லேபர் கட்சிக்கே தமது வாக்குகளைப் பதிவுசெய்துள்ளார்கள் என்பது தெளிவாகப் புரிகிறது.