அனிமல் படத்தைப் பார்த்து ரசித்தேன்… ரஜினி, அஜித் பட நடிகை கருத்து!

அனிமல் படத்தைப் பார்த்து ரசித்தேன்… ரஜினி, அஜித் பட நடிகை கருத்து!

இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா ரன்பீர் கபூரைக் கதாநாயகனாக வைத்து இயக்கிய அனிமல் திரைப்படம் சமீபத்தில் ரிலீஸானது. இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். முக்கியக் கதாபாத்திரங்களில் பாலிவுட் நடிகர்களான அனில் கபூர் மற்றும் பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர். அனிமல் படம் பெண்ணடிமைத் தனத்தை விதந்தோதுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனாலும் இந்த படம் 900 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது.

இந்த படத்தின் இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா ஆணாதிக்கத்தை தன் படங்களில் பெருமையான விஷயமாக காட்டுகிறார் எனக் கூறி அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனாலும் நான் விமர்சனங்களைக் கண்டுகொள்வது கிடையாது என சந்தீப் கூறியுள்ளார். இந்த படத்தைப் பற்றி பாலிவுட் பிரபலங்களான ஜாவேத் அக்தர் மற்றும் கங்கனா ரனாவத் போன்றவர்களும் எதிர்மறை விமர்சனங்களை வைத்திருந்தனர்.

இந்நிலையில் மற்றொரு பாலிவுட் நடிகையான ஹூமா குரேஷி அனிமல் படத்தை பாராட்டியுள்ளார். இது சம்மந்தமாக அவர் ”அனிமல் படத்தைப் பார்த்து ரசித்தேன். எல்லா விதமான படங்களும் உருவாக்கப்பட வேண்டும். அதைப் பார்ப்பதா வேண்டாமா என்பதை ரசிகர்கள் முடிவு செய்துகொள்ளட்டும். இந்த படத்தில் வருவது போல இயந்திரத் துப்பாக்கியால் பலரைக் கொல்லும் ஆக்‌ஷன் படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன்” எனக் கூறியுள்ளார்.