உக்ரைனின் பெரும்பாலான பகுதி இருளில் மூழ்கியிருந்தும்…… வைத்தியர்கள் சாதனை!!!

Spread the love
வைத்தியர்கள்

கடந்த ஒன்பது மாதங்களாக உக்ரைனில் தாக்குதல் இடம்பெற்று வருகின்றன. இந் நிலையில் ரஷ்ய படைகள் அங்குள்ள பிரதான மின் கட்டமைப்புக்கள் மீது தாக்குதல் நடத்தியதனால் உக்ரைனின் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன.

இந்நிலையில் ஒரு குழந்தைக்கு அவசரமாக இதய சத்திரசிகிச்சை மேற்கொள்ளவேண்டி ஏற்பட்டு வைத்தியர்கள் தலையில் டோர்ச் லைட் அணிந்து குறித்த சிகிச்சையினை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர். அதனையடுத்து அங்குள்ள மின்கட்டமைப்புக்களை திருத்தும் பணிகள் இடம்பெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.