திருமண லெஹங்கா ஸ்டில்களில் பிரபல நடிகை…

Spread the love

நடிகை ஷிவானி நாராயணனின் லேட்டஸ்ட் வீடியோ, போட்டோஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பான “பகல் நிலவு” என்ற சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார் நடிகை ஷிவானி. அதனை தொடர்ந்து அதே சேனலில் கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார். அந்தத் தொடரிலிருந்து பாதியிலேயே விலகிவிட்டார்.

பின் ஜீத்தமிழில் “இரட்டை ரோஜா” என்ற தொடரில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அதிலிருந்து பிக் பாஸ் சீசன் 4 ல் போட்டியாளராகக் கலந்துகொண்டு பிரபலமானார். அதன் பின் ஷிவானிக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்தது. கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அதன் பின் வடிவேலு நடிப்பில் உருவான “நாய் சேகர்” படத்தில் நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். அடிக்கடி போட்டோஷுட் எடுத்து இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு விருந்தளிக்கிறார். தற்போது லெஹங்காவில் வீடியோ ஒன்றினை வெளியிட்டு இன்ஸ்டாவில் வைரலாக்கி வருகிறார்.