விமானம் விபத்துக்கு உள்ளான நேரம் Live FaceBook வீடியோ வெளியிட்ட பயணி… இறந்து விட்டார்…

இந்த செய்தியை பகிர

நேபாள விமான விபத்து பற்றி நாம் அறிந்து இருப்போம். நேற்றைய தினம்(ஞாயிறு அன்று) நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து போக்கரா நோக்கிச் சென்ற விமானம் விபத்துக்கு உள்ளாகி அதில் பயணித்த 72 பேரில் 68 பேர் உயிரிழந்ததாக அறியப்படுகிறது. இதில் 3 பேர் உயிருக்குப் போராடி வருகிறார்கள். இது இவ்வாறு இருக்க, விமானம் விபத்துக்கு உள்ளாகப் போவது தெரியாமல், உள்ளே இருந்த இந்தியர் ஒருவர்..

வீடியோ எடுத்து அதனை பேஸ் புக்கில் லைவ்வாக விட்டுள்ளார். ஆனால் அவர் வீடியோ எடுத்துக் கொண்டு இருக்கும் பொழுதே விமானம் திடீரென தரையை நோக்கி வேகமாகச் செல்ல ஆரம்பித்து விட்டது. இந்த வீடியோவை லைவாக விட்ட நபர் இறந்து விட்டதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது. இருப்பினும் அவர் கடைசியா வெளியிட்ட வீடியோ.. உலகையே உலுக்கியுள்ளது. அத்தோடு பேஸ் புக் நிறுவனம் அதனை நீக்கவில்லை.

என்பதும் குறிப்பிடத்தக்க விடையம். விமானம் எப்படி விபத்துக்கு உள்ளானது என்பதனை அறிய இந்த கடைசி வீடியோ உதவியாக இருக்கும் என்று நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். அந்த வீடியோ கீழே இணைப்பு. (அதன் ஒரு பகுதி) முழுவதும் அல்ல.


இந்த செய்தியை பகிர