கனடாவில் வாழும் பிரிவினைவாத தமிழர்களுக்காக…. கனடா இலங்கை மீது தடை விதித்தது…. உளறும் இலங்கை அமைச்சர்!!!

இந்த செய்தியை பகிர

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ஷ, கோட்டாபாய ராஜபக்ஷ உட்பட இரண்டு இராணுவ உயர் அதிகாரிகள்மீது கனடா அரசாங்கம் அண்மையில் தடை விதித்தது. இதற்குப் பதிலலித்த இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் இலங்கை மீது மனித உரிமை மீறல்கள் தொடர்பாகத் தடை உத்தரவு பிறப்பிப்பதற்கு கனடாவுக்கு உரிமை இல்லை எனவும், இவ்செயற்பாடானது கனடாவில் வாழும் தமிழ் பிரிவினவாதிகளை சந்தோசப்படுத்துவதற்காகவே மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பாராளுமன்றத்தில் தனது விசேட உரையினை ஆற்றியபோது உலகில் பெரும்பாலான நாடுகளால் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பினரை முடிவுக்குக் கொண்டு வந்ததனை மனித உரிமை மீறலாகக் கருதுவது ஏற்றுக்கொள்ள முடியாத செயற்பாடாகும், அத்துடன் இலங்கையில் இடம்பெற்றது சிவில் யுத்தம் இல்லை மாறாகப் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.


இந்த செய்தியை பகிர