
உலகளாவிய ரீதியில் டிக்டாக் பாவனையானது மிகவேகமாக அதிகரித்துவரும் நிலையில் இன்று கனடிய அரசானது அதன் அரசாங்கக் கருவிகளில் டிக்டாக் செயலி இருக்கக் கூடாது என உத்தரவு விட்டுள்ளது. அதாவது டிக்டாக் செயலியினால் ஏற்றுக்கொள்ள முடியாதளவு பாதுகாப்பு மற்றும் தனிநபர் சுதந்திரப் பிரச்சினைகள் காணப்படுவதன் காரணமாகத் தாங்கள் இந்த முடிவுக்கு வந்ததாகக் கனடிய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கனடிய அரசாங்கத்தின் இந்த முடிவானது பெரும் ஏமாற்றத்தினைத் தருவதாக டிக்டாக் நிறுவன அதிகாரிகள் அறிக்கை விட்டுள்ளனர். சில பாதுகாப்புப் பிரச்சனைகள் காரணமாக அமெரிக்காவும் ஜரோப்பிய ஆணையகமும் அண்மையில் டிக்டாக் பாவனையி இடைநிறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.