
மலையாள நடிகையான ரெபா மோனிகா ஜான் தமிழ், கன்னடம் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய திரைப்பட நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு “ஜாக்கோபினிடே ஸ்வர்கராஜ்யம்” என்னும் மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமானார்.
நல்ல அழகு, உயரம், தோற்றம் என ரசிகர்களை வெகு சீக்கிரத்தில் கவர்ந்த நடிகை ரெபா மோனிகா ஜான் தொடர்ந்து கிடைத்த பட வாய்ப்புகளில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். தமிழில் 2018-ம் ஆண்டு ஜெய் நடித்த “ஜருகண்டி” திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமானார். பின்னர் 2019-ம் ஆண்டு கன்னட திரைப்படத்திலும் நடித்து அறிமுகமாகியுள்ளார்.
அதன் பின்னர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து பிரபலமான நடிகையாக மாறினார். இவர் தனது நெருங்கிய நண்பரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பின்னர் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வரும் ரெபா தற்போது ஹாட்டான உடையணிந்து படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டு மோசமான ரசனையில் மூழ்கியுள்ளார்.


