பிரித்தானியாவில் உள்ள அதி பாதுகாப்பு மிக்க, வான்ஸ்-வேத் சிறையில் இருந்து, ஈரானிய உளவுத் துறையச் சேர்ந்தவர் தப்பியுள்ளார். ஈரான் நாட்டு உளவாளியான மற்றும் முன் நாள் ஈரான் நாட்டு ராணுவப் பயிற்ச்சி பெற்ற காலிஃப் என்ற நபரை, பிரித்தானிய உளவுத் துறை கைதுசெய்தது. அதுவும் அவர் பிரித்தானிய ராணுவ சீருடையில் இருந்தவேளை கைதானார். இன் நிலையில், காற்றில் ஒருவர் மறைவது போல, சிறையில் இருந்து திடீரெனக் காணாமல் போயுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானிய விமான நிலையங்கள், மற்றும் ரயில்வே நிலையம், துறை முகம் என்று பல இடங்களில் பொலிசார் ஒவ்வொருவரையும் மறித்து தேடி வரும் நிலையில். 150 பேர் கொண்ட தனிப்படையை அமைத்து பொலிசார் பெரும் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளார்கள். ஆனால் காலொஃபைக் கண்டு பிடிப்பது மிக மிக கஷ்டமான விடையம் என்று பொலிசார் தெரிவித்துள்ளார்கள். காரணம் அவரது முன் நாள் ராணுவப் பயிற்ச்சி தான். அவரால் திறமையாக மறைந்து வாழ முடியும் என்று பொலிசார் கருதுகிறார்கள்.
பிரித்தானிய பொலிசார் அவரைக் கைது செய்தவேளை, அவர் ஒரு ஈரான் நாட்டு உளவாளி என்று அறிந்து கொண்டார்கள். ஆனால் மிக மிக முக்கியமான நபர் என்பது பொலிசாருக்கு தெரிய வரு முன்னரே.. ஈரான் நாடு இதில் காய்களை நகர்த்தியுள்ளது. சிறைச்சாலையில் உள்ள அதிகாரிகள் உதவி செய்யாமல் அவரால் நிச்சயம் தப்பி இருக்க முடியாது. எனவே ஈரான் நாடு, பெரும் தொகைப் பணத்தை கொடுத்து அவரை மீட்டுள்ளது. ஈரானின் இந்தச் செயல் பிரித்தானியாவை முட்டாளாக்கியுள்ளதோடு. சொந்த மண்ணில் வைத்து, இப்படி நடந்து பிரித்தானிய பாதுகாப்பில் உள்ள பெரும் ஓட்டையாக கருதப்படுகிறது. ஈரான் எந்த அளவு முன்னேறியுள்ளது ? அதன் உளவுத் துறை பிரித்தானியாவில் எந்த அளவு காலூன்றியுள்ளது, என்பது இதனை வைத்துப் பார்க்கும் போது நன்றாகப் புரிகிறது.