யாழ்ப்பாணத்தினை ஆட்டிப்படைக்கும் வாள்வெட்டுக் கும்பல்…. பொலிஸார் மௌனம் காப்பது ஏன்!!!

இந்த செய்தியை பகிர

வடமாகாணத்தில் அதுவும் யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக அதிகமானோர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் பல இலட்சம் பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறான கொடூரமான தாக்குதல்களினை மேற்கொள்பவர்களை பொலிஸார் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் யாழ் கல்வியங்காடு பொதுச்சந்தைக் கட்டிடத் தொகுதியில் உள்ள வர்த்தகர்மீது நேற்றிரவு முகமூடி அணிந்த மர்ம கும்பல் ஒன்று வாள்வெட்டுத் தாக்குதல் நடாத்தியுள்ளதுடன் கடையின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததுடன் கடையில் இருந்த ஜந்து இலட்சம் பெறுமதியான பணத்தினையும் எடுத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் இதன்போது பலத்த காயங்களுக்கு உள்ளான வர்த்தகர் யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் இது தொடர்பாகத் தீவிர விசாரணையினை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.


இந்த செய்தியை பகிர