காசா பகுதிக்குள் முன்னேறி வரும் இஸ்ரேல் படைகளுக்கு பெரும் சவாலாக இருப்பது, வடக்கு முனை ஆகும். அங்கே ஹமாஸ் இயக்கம் யாரும் எதிர்பார்க்காத பெரும் தாக்குதலை ஆரம்பித்துள்ளது. இதனை சற்றும் இஸ்ரேல் படைகள் எதிர்பார்கவில்லை. காரணம் இஸ்ரேல் விமானப்படை, இந்தப் பகுதியில் உள்ள சுமார் 600 நிலைகள் மீது கடும் தாக்குதலை ஏற்கனவே நடத்தி இருந்தது. இதனால் இஸ்ரேல் படைகள் முன்னேற இலகுவாக இருக்கும் என்று, கருதப்பட்ட நிலையில்.
இந்த அதிர்ச்சி தாக்குதல் ஆரம்பமாகியுள்ளது என அல்-ஜசீரா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் படைகள் நினைப்பது போல அவ்வளவு இலகுவாக காசா பகுதியை கைப்பற்றி. வீடு வீடாகத் தேடி ஹமாஸ் இயக்க உறுப்பினர்களை கொன்றுவிட முடியாது. மேலும் சொல்லப் போனால், இம் முறை பல நூறு இஸ்ரேல் படைகள் உயிரிழகக்கூடும் என்றும் எதிர்வு கூறப்படுகிறது.