யுவன் சங்கர் ராஜாவால் GOAT படமே சுதப்பப்போகிறது- வலைப் பேச்சு பிஸ்மி போட்ட குண்டு

யுவன் சங்கர் ராஜாவால் GOAT படமே சுதப்பப்போகிறது- வலைப் பேச்சு பிஸ்மி போட்ட குண்டு

கடந்த சில வருடங்களாக , இசையமைப்பாளர் யுவன், அந்த ராக்கிலேயே இல்லை. அவர் இசையமைப்பை விட்டி வெளியேறி எங்கேயோ சென்றுகொண்டு இருக்கிறார். அவரை போய் கட்டி இழுத்து வந்து அதுவும் விஜய் படத்திற்கு இசையமைக்க விட்டால் எப்படி இருக்கும் ? அதாவது இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு தான் விஜய் படத்தை இயக்குவது. விஜயை வைத்து படம் எடுக்க மாட்டோமா என்று, எத்தனை இயக்குனர்கள் ஏங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

அந்த வாய்ப்பு வெங்கட் பிரபுவுக்கு கிடைத்தும், அவர் அதனை சரியாகப் பயன்படுத்தவில்லை என்று வலைப் பேச்சு பிஸ்மி மிகவும் சர்சையான கருத்தை வெளியிட்டுள்ளார். கோட் படத்திற்கு அனிருத்தை போட்டு இருந்தால், படம் பாதி ஹிட் ஆனதற்கு சமன். ஆனால் அப்படிச் செய்யாமல், தனது தம்பியை இழுத்து வந்து போட்டுள்ளார். தற்போது முதல் பாடலே சர்சையில் உள்ளது. இதனால் வெங்கட் பிரபுவின் பெயர் தான் நாசமாகியுள்ளது என்று பிஸ்மி தெரிவித்துள்ளார்.

தனது தம்பி என்பதற்காக ஒரு தரா தரம் பார்காமல் யுவனைக் கொண்டுவந்து கோட் படத்திற்கு இசையமைப்பாளராக போட்டது, வெங்கட் பிரபு செய்த மிகப்பெரிய பிழை என்று கூறியுள்ளார் பிஸ்மி.