GOAT படத்தில் டிஜிடல் உரிமை 110கோடிக்கு விற்பனை LEO படத்தை விட குறைந்தது ஏன் ?

GOAT படத்தில் டிஜிடல் உரிமை 110கோடிக்கு விற்பனை LEO படத்தை விட குறைந்தது ஏன் ?

தற்போது விஜய் நடித்துவரும் கோட் படத்தின் டிஜிடல் உரிமை இறுதியாக 110 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. முதலில் 160 கோடி என்று படத் தயாரிப்பு நிறுவனம் சொல்லிவந்தது. ஆனால் வெறும் 90 கோடிக்கு தான் எம்மால் இதனை வாங்க முடியும் என்று விலையை நிர்ணயித்து விட்டதாம் நெட் பிளிக்ஸ். இதனால் மேலும் பேரம் பேசப்பட்டு, இறுதியாக 110 கோடி என்ற முடிவை எட்டியுள்ளார்கள்.

இருப்பினும் தளபதி விஜய் நடித்த லியோ படம் 120 கோடிக்கு டிஜிடல் உரிமை விற்பனை ஆனது. அதனோடு ஒப்பிடும் போது இது 10 கோடி குறைவாகவே விற்கப்பட்டுள்ளது. இன் நிலை ஏன் என்று, சினிமா வட்டாரத்தில் பல பேச்சுகள் அடிபட்டு வருகிறது. விஜய் அரசியலில் இறங்கியது தான் காரணம் என்று சிலர் பேசினாலும். தற்போது சினிமாவிற்கு சரியான மார்கெட் இல்லை என்றும். மார்கெட் பெரிய டவுனில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது இவ்வாறு இருக்க, படத்தை இயக்கிவரும் வெங்கட் பிரபுவுக்கு, பல அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளதாம். பல கட்சிகளின் தலைவர்கள் அவரை தொடர்புகொண்டு படத்தில் விஜய் அரசியல் பேசக் கூடாது, அப்படியே படத்தை எடுங்கள் என்று அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.