விஜய் சேதுபதியை இயக்க தயாராகி வரும் குட்னைட் மணிகண்டன்!

விஜய் சேதுபதியை இயக்க தயாராகி வரும் குட்னைட் மணிகண்டன்!

கடந்த ஆண்டு மே மாதம் வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூலையும் குவித்தது பீல்குட் படமான குட்னைட். பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாமல் ரிலீஸான இந்த படம் பலரது பாராட்டுகளையும் குவித்தது. இதையடுத்து அதே தயாரிப்பு நிறுவனத்துக்கு மணிகண்டன் லவ்வர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் பிப்ரவரி 9 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

மணிகண்டன் நடிகராக மட்டும் இல்லாமல், திரைக்கதை எழுத்தாளராகவும், இயக்குனராகவும் சில படங்களில் பணியாற்றியுள்ளார். விக்ரம் வேதா உள்ளிட்ட சில படங்களில் திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றியுள்ள அவர் இப்போது விஜய் சேதுபதியை வைத்து திரைப்படம் இயக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறாராம்.

அதற்காக திரைக்கதை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வரும் அவர், அதற்காக நடிக்க வரும் சில வாய்ப்புகளையும் இப்போது ஏற்க மறுத்துள்ளாராம்.