சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் ஹரிஷ் கல்யாண்!

ஹரிஷ் கல்யாண்

தமிழ் சினிமாவில் பிரபல இளம் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இவர் வருமுதன் முதலில் சிந்து சமவெளி திரைப்படத்தில் நடித்த திரைத்துறையில் அறிமுகமானார்.அதன் பின்னர் அரிது அரிது, சட்டப்படி குற்றம், சந்த மாமா, பொறியாளர் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

பொறியாளர் திரைப்படத்தில் தான் இவர் ஹீரோவாக அறிமுகமானார் அந்த படம் மிகப்பெரிய அளவில் பேசப்படவில்லை இருந்தாலும் தொடர்ந்து அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பிறகு அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கத் துவங்கியது.

அதன் பின்னர் தாராள பிரபு, பியார் பிரேமா காதல் பரதத்திலும் நடித்திருந்தார் இதில் குறிப்பாக இதில் குறிப்பாக தாராள பிரபு திரைப்படம் தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றி பெற்றது. அடுத்ததாக பார்க்கிங் படத்தில் ஹரிஷ் கல்யாண நடித்திருந்தார்.

இந்த படத்தில் இந்துஜா ரவிச்சந்திரன், எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் முக்கிய ரோல்களில் நடித்து இருந்தனர். இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து ஹிட் ஆனது. இந்நிலையில் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் தற்போது பார்க்கிங் 2ம் பாகத்திற்கான பணிகளை தொடங்கி இருக்கிறாராம். அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என கூறப்படுகிறது.