சில நாட்டு மக்கள் பிரித்தானியாவில் இனி அகதிகள் தஞ்சம் கோர முடியாது- புது சட்டத்தை கொண்டு வருகிறார் சுலைலா

இந்த செய்தியை பகிர

பிரித்தானிய உள்துறை அமைச்சு முன்னெப்பொழுதும் இல்லாதவாறு தனது எல்லைகளை பாதுகாக்க ஆரம்பித்துள்ளது. இதனூடாக பிரித்தானியாவுக்குள் வரும் அகதிகளின் எண்ணிக்கையை பெரும் அளவில் கட்டுப்படுத்த உள்துறை அமைச்சு முற்பட்டுள்ளது. வந்த அகதிகளின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், அவர்களை உடனுக்கு உடன் நாடு கடத்தி வருகிறது பிரித்தானியா. இன் நிலையில் பிரித்தானிய உள்துறை அமைச்சரான, சுலைலா கடுமையான சட்ட திட்டங்களை கொண்டுவர உள்ளார்.

உலகில் பாதுகாப்பான நாடுகள் என்று ஒரு பட்டியலையும். பாதுகாப்பு அற்ற நாடுகள் என்ற ஒரு பட்டியலையும் அவர் தயாரித்து வருகிறார். பாதுகாப்பான நாடு என்று பிரித்தானியா கருதும் நாட்டில் இருந்து, ஒரு நபர் பிரிட்டன் வந்து தஞ்சம் அடைந்தால். அவரது விண்ணப்ப படிவத்தை வீசாரிக்க முன்னரே ரத்துச் செய்து. அவரை திருப்பி அனுப்ப கூடிய வகையில். சட்டதிட்டங்களை மாற்றியமைக்க சுலைலா முனைப்புக் காட்டி வருகிறார். இந்த விடையம் பிரதமர் ரிஷி சுண்ணக்கிற்கு பெரும் நெருக்குதலை கொடுத்துள்ளது. ஆனால்..

ரிஷி சுண்ணக்கால் எதுவும் செய்ய முடியவில்லை. காரணம் நாடே கெட்டு குட்டிச்சுவராகியுள்ள இந்த நேரத்தில், அகதிகள் அதிக அளவில் வந்து தஞ்சம் அடைந்தால். அவர்களை பராமரிக்க என பல மில்லியன் டாலர்களை அரசு ஒதுக்கவேண்டி இருக்கும். இதனால் ரிஷி சுண்ணம் என்ன செய்வது என்று தெரியாது தடுமாறி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. Source: Home Secretary Suella Braverman that recommends BANNING people arriving from ‘safe’ countries..


இந்த செய்தியை பகிர