ஐஸ் கட்டி தண்ணீருக்குள் இறங்கும் ரகுல் பிரீத் சிங் இணையமே சூடாகியது எப்படி?

Spread the love

செம ஹாட்டாக நடிகை ரகுல் பிரீத் சிங் ஐஸ்கட்டி தண்ணீருக்குள் இறங்கி வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்து ரசிகர்கள் திக்குமுக்காடியுள்ளனர். நடிகை ரகுல் பிரீத் சிங் தமிழில் ‘யுவன்’ திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானாலும் அருண் விஜய்யுடன் தடையற தக்க படத்தில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து என்னமோ ஏதோ, ஸ்பைடர், தேவ், என்ஜிகே உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

இவர் தமிழை கடந்து தெலுங்கு, இந்தி மொழி படங்களிலும் நடித்து வருகிறார். நடிப்பதை கடந்து சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரகுலை இன்ஸ்டாகிராமில் 23 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர். ரகுலும் அவரது ரசிகர்களை மகிழ்விக்க அடிக்கடி பிக்கினி தரிசனமும் செய்வதுண்டு.