Skip to content
அதிர்வு அதிர்வு

athirvu.in

  • Home
  • சினிமா
  • இலங்கை
  • உலகம்
  • aboutus
அதிர்வு
அதிர்வு

athirvu.in

நடிக்கும் போது கர்ப்பம் ஆகிட்டேன்..” – ரகசியம் உடைத்த மாளவிகா..!

Tamil Tamil, November 20, 2023November 19, 2023

தமிழ் சினிமாவில் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான உன்னைத் தேடி என்ற திரைப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக மாளவிகா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் நடிகை ஸ்வேதா மேனன்.

இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ரசிகர்கள் பலரும் இவரை மாளவிகா என்று அடையாளம் கண்டனர். எனவே, தன்னுடைய பெயரை மாளவிகா என்று மாற்றிக் கொண்டார் நடிகை ஸ்வேதா மேனன்.

இன்று வரை ரசிகர்களால் மாளவிகா என்று அறியப்படும் இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார் அதில் சினிமாவில் தனக்கு நேர்ந்த கசப்பான மற்றும் ஏமாற்றமான விஷயங்கள் சிலவற்றை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

சொல்லாம பண்ணிட்டாங்க..

அதில் கசப்பான சம்பவம் என கூறிய பொழுது நான் அந்த இயக்குனரின் பெயரை குறிப்பிட முடியவில்லை. கதை சொல்லும் பொழுது ஒரு மாதிரி சொன்னார். ஆனால், படப்பிடிப்பு தளத்தில் அது வேற மாதிரி இருந்தது.

ஆனாலும் படத்தை ஒப்புக்கொண்டோம் என்ற காரணத்தினால் அதை நடித்து கொடுத்தேன். முத்த காட்சிகள் எல்லாம் சொல்லாம பண்ணிட்டாங்க.. . அதனை நான் சற்று எதிர் பார்க்கல. ஆனால், படத்தின் கதைக்கு முக்கியம் என்று இயக்குனர் என்னை சமரசம் செய்தார்.

கடைசியாக, படம் ரிலீஸ் ஆன பிறகு தான் தெரிந்தது அதெல்லாம் மிகவும் மோசமாக இருந்தது. இப்போது அந்த படம் என்ன அந்த இயக்குனர் யார் என்றெல்லாம் கூற விரும்பவில்லை இது எனக்கு கசப்பான அனுபவமாக இருந்தது என கூறியிருந்தார்.

அதனை தொடர்ந்து நடிகர் விஜயின் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டார்கள். குறிப்பாக அவருடன் அறிமுக பாடலில் நடனம் ஆட வேண்டும் என்று கேட்டார்கள்.

விஜய் கூட நடிக்கும் போது கர்ப்பம்..

மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் மிகவும் மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டேன். குருவி படத்தில் விஜய்யுடன் நடனமாட வேண்டிய காட்சி.

படத்தை ஒப்புக்கொண்டேன். ஆனால், சில மாதங்கள் கழித்து தான் அந்த அந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்தது. அப்போது, நான் கர்ப்பமாகி விட்டேன். மூன்று மாதம் கர்ப்பமாக இருந்ததால் நடனம் ஆடக்கூடாது என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள்.

ஆனால், நடிகர் விஜய்யின் படம் என்பதால் படத்திலிருந்து விலக மனம் வரவில்லை. எனவே, ஒரு மாடல் அழகிய போல அங்கும் இங்கும் நடப்பது போன்ற காட்சிகள் மட்டும் சில நிமிடங்கள் நடித்திருந்தேன் என பேசியிருக்கிறார்.

இது எனக்கு ஏமாற்றமான ஒரு அனுபவமாக இருந்தது. நடிகர் விஜய்-யை South Indian Hrithik Roshan என்று கூறலாம். அவருடன் நடனம் ஆட வேண்டும். அதற்கெல்லாம் தயாராகிக் கொண்டிருந்தேன்.

ஆனால் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் நேரத்தில் நான் கர்ப்பமாகி விட்டேன் என்பது எனக்கு ஒரு சிறிய ஏமாற்றமாக இருந்தது என கூறி இருக்கிறார் மாளவிகா.

Share this…
  • Whatsapp
  • Facebook
  • Twitter
  • Gmail
  • Messenger
சினிமா

Post navigation

Previous post
Next post

Most Viewed Posts

  • 00 83 இளம் நடிகையுடன் ரகசிய உறவில் விஜய் சேதுபதி..!
  • sample குரைடன் roundabout வைத்து பெண்ணை கற்பழித்த நபர்.. பட்டப் பகலில் நடந்தால் பரபரப்பு !
  • 00 109 விஜய் மகனால் விழி பிதுங்கும் லைக்கா..
  • பிரியா வரியார் கவர்ச்சியை இப்படி கூட அழகா காட்ட முடியுமா? வசீகரிக்கும் பிரியா வரியார்!
  • sara detha அப்பா கள்ளக் காதலி மற்றும் மாமா அனைவரையும் Gatwick Airport வைத்து தூக்கிய பிரிட்டன் பொலிஸ்
©2023 அதிர்வு | WordPress Theme by SuperbThemes