ரஜினி நடிக்கும் படத்தை தயாரிக்கும் வாய்ப்பை மறுத்தேன்…

ரஜினி நடிக்கும் படத்தை தயாரிக்கும் வாய்ப்பை மறுத்தேன்…

ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்திலும் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ள லால் சலாம் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். பிப்ரவரி 9 ஆம் தேதிக்கு ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.

இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நகைச்சுவை நடிகர் செந்தில் ரஜினிகாந்தோடு இணைந்து நடித்துள்ளார். கடைசியாக இருவரும் படையப்பா படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இந்நிலையில் இப்போது செந்தில் அளித்துள்ள ஒரு நேர்காணலில் ரஜினி உடனான ஒரு சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார்.

அதில் “ரஜினி சார் என்னை ஒருநாள் அழைத்து நான் உங்களுக்கு கால்ஷீட் தருகிறேன். என்னை வைத்து ஒரு படத்தைத் தயாரியுங்கள் எனக் கூறினார். ஆனால் நான் அதை வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். எனக்கு உங்களோடு நடிப்பதே போதும் என சொல்லிவிட்டேன்” எனக் கூறியுள்ளார்.