இடையில் கொஞ்சம் வெட்டு குத்துன்னு போய்ட்டேன்… இப்போ திரும்ப வந்துட்டேன் – ஜெயம் ரவி பேச்சு!

இடையில் கொஞ்சம் வெட்டு குத்துன்னு போய்ட்டேன்… இப்போ திரும்ப வந்துட்டேன் – ஜெயம் ரவி பேச்சு!

ஜெயம் ரவி இப்போது ஒன்றுக்கு மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நித்யா மேனனோடு ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படங்களுக்கு இடையில் ஜெயம் ரவி கீர்த்தி சுரேஷோடு சைரன் என்ற படத்திலும் நடித்து வருகிறார். சைரன் படத்தில் அனுபமா பரமேஸ்வரனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்த திரைப்படத்தை அவரது மாமியார் சுஜாதா தயாரித்து வருகிறார். இந்த படத்தை ஆண்டனி பாக்கியராஜ் என்பவர் இயக்க இருப்பதாகவும் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றன. இந்த படத்தின் ரிலீஸ் தேதி இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 16 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நடந்துள்ள பத்திரிக்கையாளர் சந்திப்பில் “சைரன் திரைப்படம் தந்தை மகளுக்கான இடையேயான பாசப்பிணைப்பான கதைக்களமாக உருவாகியுள்ளது. நடுவில் கொஞ்சம் வெட்டு குத்து படங்கள் என போய்விட்டேன். ஆனால் இப்போது திரும்பி வந்துவிட்டேன். இந்த படம் குடும்ப படமாக இருக்கும். ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் சிறப்பாக நடித்துள்ளார்” எனக் கூறியுள்ளார்.