உலகத் தமிழர்களுக்குப் புதிய நம்பிக்கை அளிக்கும் ஆதாரங்களுடன் வருவேன்!

Spread the love

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் உயிருடன்தான் இருக்கிறார் என்ற அறிவிப்பு இலங்கை மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவருக்கும் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக உரிய ஆதாரங்கள் கிடைத்தவுடன் அதை ஊடகங்களில் வெளியிடப் போவதாக உலகத் தமிழர் கூட்டமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் மீண்டும் தெரிவித்துள்ளார்.

ஏ.என்.ஐ செய்திச்சேவை இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

வேலுபிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், விரைவில் அவர் பொது வெளியில் வருவார் என்றும் பழ.நெடுமாறன் தகவல் வெளியிட்ட சில வாரங்களுக்குப் பின்னர் அவரது அறிக்கை மீண்டும் வெளியாகியுள்ளது.

எனினும் முன்னதாக இந்தக் கூற்றை மறுத்த இலங்கையின் இராணுவப் பேச்சாளருமான பிரிகேடியர் ரவி ஹேரத், வேலுபிள்ளை பிரபாகரன் உயிரிழந்துவிட்டார் என்பதை நிரூபிப்பதற்கான “மரபணுச் சான்றிதழ்கள்” உட்பட அனைத்து பதிவுகளும் இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.