அவங்க கூட நடிக்கவே மாட்டேன் – சினேகாவை அசிங்கப்படுத்திய முன்னணி நடிகர்!

Spread the love

நடிகை சினேகா உடன் நடிக்கமாட்டேன் என நடிகர் மாதவன் இயக்குனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம்.

தென்னிந்திய சினிமாவின் எவர் க்ரீன் நடிகையான சினேகா 2001 ஆம் ஆண்டு இங்கே ஒ நீலப்பக்சி என்ற மலையாள மொழி படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் 2001 ஆம் ஆண்டு வெளியான என்னவளே திரைப்படம்மூலம் கோலிவுட் சினிமா ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார்.

அந்தப் படத்தில் நடிகர் மாதவன் ஹீரோவாக நடித்திருப்பார். ஆரம்பத்தில் சினேகா தான் ஜோடி என்றதும் மாதவன் இயக்குனரை அழைத்து அவர் புதுமுக நடிகையா? அவருடன் நடிக்கமாட்டேன். வேறு யாராவது முன்னணி நடிகையிடம் பேசிப் பாருங்களேன் என்றாராம்.

பின்னர் இயக்குனர் சிம்ரன் மற்றும் ஜோதிகாவை அணுகினாராம். ஆனால், அவர்கள் இருவருமே பிசியாக இருந்ததால் மீண்டும் இயக்குனர் சினேகா சரியாக இருப்பார். நிச்சயம் படம் ஹிட் ஆகும் என எடுத்துச் சொன்னபிறகு ஒரு மனதோடு ஒப்புக்கொண்டாராம் மாதவன். இதை கேட்டு மிகுந்த வருத்தப்பட சினேகா அதற்காவே நன்றாக நடித்தாராம்.