விஜய் கட்சியின் பிரச்சார பாடலுக்கு அழைத்தால் மகிழ்ச்சி…

விஜய் கட்சியின் பிரச்சார பாடலுக்கு அழைத்தால் மகிழ்ச்சி…

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் சந்தோஷ் நாராயணன். குறும்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்குள் பிரவேசித்த பல இயக்குனர்களின் படங்களுக்கு இசையமைத்து பின்னர் ரஜினியின் காலா மற்றும் கபாலி ஆகிய படங்களுக்கு இசையமைத்து பிரபலமானார்.

இந்நிலையில் இன்று அவர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ‘நீயே ஒளி’ என்ற பெயரில் இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். இது சம்மந்தமான பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசும்போது அவர் விஜய்யின் அரசியல் வருகைக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

அப்போது பேசிய அவர் “நடிகர் விஜய்யை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும். அவரின் நேர்மை அரசியலிலும் வெளிப்பட்டால் எல்லோருக்கும் நல்லதாக அமையும். அவரின் கொள்கைகள் பொறுத்தே அவரின் வாக்குகள் அமையும். அவர் கட்சியின் பிரச்சார பாடலுக்கு இசையமைக்க என்னை அழைத்தால் நான் செய்துகொடுப்பேன்” எனக் கூறியுள்ளார்.