இஸ்ரேல் பிரதமருக்கு ICC நீதிமன்றில் பிடியாணை போர் குற்ற முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது !

இஸ்ரேல் பிரதமருக்கு ICC நீதிமன்றில் பிடியாணை போர் குற்ற முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது !

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமினுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில்(ICC) வழக்கு தொடுக்கப்பட்டுள்ள நிலையில். அவருக்கு பிடியாணை பிறப்பிக்க சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கூடவே 3 ஹாமாஸ் இயக்க தலைவர்களுக்கும் பிடியாணை பிறப்பிக்கப்பட உள்ளது. காசா பகுதியில் கடந்த 7 மாதங்களாக இடம்பெற்று வரும் போர் காரணமாக பல மனிதப் படுகொலைகள் இடம்பெற்றுள்ளது என்றும்.

இதற்கு 2 தரப்பும் பொறுப்பு என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. காசா பகுதியில் பொதுமக்கள் கண்மூடித் தனமாக கொல்லப்பட்டு வருகிறார்கள் என்றும். இதற்கு இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்பினரே காரணம் என்று அது மேலும் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்தே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், தற்போது பிடியாணை ஒன்றை பிறப்பிக்க உள்ளதாக அறியப்படுகிறது.