பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் மாயா மற்றும் பூர்ணிமா இது வரும் சேர்ந்து கொண்டு செய்யக்கூடிய அட்டூழியங்களை அன்றாடம் ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள்.
அந்த வகையில், தற்போது போட்டியாளர் விஷ்ணு மற்றும் அவரை எப்படி வெளியே அனுப்புவது என்ற திட்டத்தில் மாயா பூர்ணிமாவின் மோசமான முகம் வெளிப்பட்டிருக்கிறது.
அதாவது நடிகை மாயா பூர்ணிமாவிடம் நீ விஷ்ணுவை காதலிப்பது போல நடி இது விஷ்ணுவின் விளையாட்டை காலி செய்து விடும் இந்த வார Eviction-ல் இருந்து நீ தப்பித்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார்.
அதாவது தன்னை Eviction-ல் இருந்து காப்பாற்றிக் கொள்ள இன்னொரு போட்டியாளரை காதலிப்பது போல் நடிக்கவும் தயாராகி விட்டார் பூர்ணிமா என்று மாயா புரிந்து வைத்திருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது.

இதனை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் இருவரையும் மோசமாக விமர்சித்து கருத்து பதிவு செய்து வருகின்றனர்.
மேலும், பழைய கமல்ஹாசன் என்றால் இந்த விஷயத்தை கிழித்து தொங்க விட்டிருப்பார்.ஆனால், தற்போது இருக்கும் கமல்ஹாசன் இந்த விஷயத்தை அருமையான விளையாட்டு தந்திரம் என்று பூர்ணிமா, மாயா-வுக்கு ஆவார்டு கொடுத்தாலும் கொடுப்பார் என நக்கல் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.