தனுஷை பார்த்தா அப்படி இருக்கு… படுக்கைக்கு ஓகே சொன்ன பூர்ணிமா!

தனுஷை பார்த்தா அப்படி இருக்கு… படுக்கைக்கு ஓகே சொன்ன பூர்ணிமா!

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் குறும்படங்களில் நடித்துமிகப்பெரிய அளவில் பிரபலமானவர் பூர்ணிமா. இவர் செய்யும் கலாட்டா, குறும்புத்தனமான பேச்சு, யதார்த்தமான நடிப்பு,ரவுடித்தனமான பெண் கேரக்டர் உள்ளிட்ட குறும்படங்களின் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார்.

குறிப்பாக youtubeலில் வெளியாகும் வெப் சீரிஸ்களில் டாம் பாயாக இவர் நடித்து மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனதன் மூலம் கிடைத்த வரவேற்ப வைத்து தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி வந்தார். அதன் மூலம் கிடைத்தது தான் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 7நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் பூர்ணிமா போட்டியாளராக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சிக்கு பின் செவப்பி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் அண்மையில் வெளியானது. அதுமட்டுமில்லாமல் ஒரு சில திரைப்படங்களில் தொடர்ந்து பூர்ணிமா நடித்து வருகிறார்.இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஒரு அதிர்ச்சிகரமான விஷயத்தை கூறினார். அதாவது எனக்கு பிடித்த நடிகர் யார் என்று கேட்டாலே தனுஷ் தான்.

அவர் எந்த ரோல் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு எந்த எல்லைக்கும் செல்வது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக தனுஷின் நடிப்பு அவ்வளவு அபாரமாக ஒவ்வொரு படத்திற்கும் இருக்கும். அதை வியந்து நான் ரசித்துள்ளேன்.

அதுமட்டுமில்லாமல் தனுஷ் பார்ப்பதற்கு பக்கத்து வீட்டுப் பையன் என்ற ரோல் கொடுத்தாலும் கூட திரையரங்கிற்கு அவரை காண வரும் பார்வையாளர்கள் கூட்டம் லட்சக்கணக்கில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் அதேபோன்று நடிப்பு திறமை நடிகை திரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இருக்கிறது.

நடிகர் தனுஷை தாண்டி நடிகைகள் என்று எடுத்துக்கொண்டால் நடிகை திரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராஜுக்கு மிகப்பெரிய நடிப்புத் திறமை இருக்கிறது. குறிப்பாக ரொமான்ஸ் அல்லது படுக்கையறை காட்சிகள் எதுவாக இருந்தாலும் நடிக்க சம்மதம் தான். ஆனால், அது கதையுடன் அந்த காட்சி நன்றாக அமைந்தால் மட்டுமே நான் அதற்கு ஓகே சொல்வேன்.

சினிமாவில் நான் தனுஷை போலவும் ஐஸ்வர்யா மற்றும் திரிஷா போலும் மிகச்சிறந்த நடிகையாக இந்த சினிமா உலகில் வலம் வரவேண்டும் என ஆசைப்படுகிறேன் என கூறியுள்ளார். இதன் மூலம் அவர் மறைமுகமாக தனுஷின் படத்திற்கு வாய்ப்பு கேட்பது போல் உள்ளதாக பலர் அவரை விமர்சித்து வருகிறார்கள். இருந்தாலும் தனுஷ் படத்திற்கு எப்படியாவது வாய்ப்பு கிடைக்காதா? என்று பூர்ணிமாவும் மறைமுகமாக ஏங்கிக் கொண்டிருக்கிறாராம்.