பாலத்தில் பல நாட்களாக கத்திருந்தாரா மனோ பாலா ? இந்த இளையராஜா அடங்கமாட்டாரா ?

Spread the love

நடிகர் மனோபாலாவின் மறைவால் ஒட்டுமொத்த திரையுலகமும் சோகத்தில் மூழ்கியுள்ளது. ஆனால் இந்தவேளை பார்த்து, இரங்கல் செய்தி வெளியிடுகிறேன் என்று சொல்லிக் கொண்டு, இளையராஜா விட்ட வீடியோ ஒன்று பெரும் சர்சையைக் கிளப்பியுள்ளது. அந்தக் காலத்தில் தான் காரில் புறப்படும் நேரத்தில். பாலத்தில் பல நாட்களாக மனோ பாலா காத்திருந்ததாகவும். தன்னை சந்திக்க இயக்குனர்கள் வரிசை கட்டி பல நாட்கள் பாலத்தில் காத்து நிற்பார்கள் என்றும் பெருமை பேசி, தன்னைப் பற்றி புகழ்ச்சி பாடியுள்ளார் இளையராஜா…

ஒருவரின் மரணத்துக்கு இரங்கல் தெரிவிக்கும்போதும் கூட தற்புகழ்ச்சி, ஆணவம் அவசியமா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பியுள்ளார்கள். அதாவது இளையராஜா பெருமை பேசியதாகவும் இது ஆணவம் என்றும் ஒரு சாரார் கருத்து தெரிவித்துள்ளனர். அதே நேரம், இளையராஜா மனோபாலா உடனான முதல் சந்திப்பையே நினைவுகூர்ந்ததாகவும், இதில் எந்த ஆணவமும் பெருமையும் இல்லை என்ற கருத்தையும் மற்றொரு சாரார் முன் வைக்கின்றனர். கீழே வீடியோவை இணைத்துள்ளோம். நீங்கள் தான் முடிவுசெய்ய வேண்டும்.