சந்திரலேகா என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்வேதா பாண்டேகர் இந்த சீரியல் கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் ஒளிபரப்பானது. இந்த எட்டு ஆண்டுகளிலும் தான் ஏற்ற கதாபாத்திரத்தை எந்த ஒரு இடையூறும் இல்லாமல் நடித்துக் கொடுத்தார் நடிகை ஸ்வேதா.
இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். குறிப்பாக நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ஆழ்வார் திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார்.
சில திரைப்படங்களில் கவர்ச்சி கதாபாத்திரங்களை ஏற்றும் நினைத்துப் பார்த்தார் ஆனால் சொல்லிக் கொள்ளும்படி இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
குறிப்பாக வள்ளுவன் வாசுகி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை ஸ்வேதா. இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற சொல்லாமல் பறக்குது வானம் என்ற பாடலில் சொட்ட சொட்ட நனைந்த தாவணி பாவாடையில் சரியான வெடக்கோழி என்று வர்ணிக்க தூண்டும் அழகில் ஹீரோவுடன் நெருக்கமான காட்சிகளில் நடனமாடி ரசிகர்களின் சூட்டை கிளப்பினார் அம்மணி.
அதனை தொடர்ந்து மீராவுடன் கிருஷ்ணா என்ற திரைப்படத்திலும் படுக்கையறை காட்சிகளில் நடித்த அசர வைத்திருந்தார்.
தொடர்ந்து பட வாய்ப்பு கிடைக்காததால் சீரியல் பக்கம் கரை ஒதுங்கியவர் சீரியலில் ரசிகர்கள் பலராலும் அறியப்பட்ட நடிகையாக உருவெடுத்தார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் இரவு நீங்கள் தூங்கும் முன்பு செய்யக்கூடிய ஒரு விஷயம் என்று கேள்வி எழுப்பிய பொழுது இரவு தூங்குவதற்கு முன்பு எண்ணெய் வைத்துக் கொள்வேன்.
நாள் முழுதும் படப்பிடிப்பு இருக்கும் நாட்களில் உடம்பு சூடாகிவிடும் எண்ணெய் வைத்துக் கொண்டு தூங்கினால் உடல் சூடு குறையும் என கூறியிருக்கிறார் நடிகை ஸ்வேதா