குக் வித் கோமாளி சீசன் 5ல் நான் இல்லை. பிரபல கோமாளி

குக் வித் கோமாளி சீசன் 5ல் நான் இல்லை. பிரபல கோமாளி

விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் குக் மற்றும் கோமாளிகள் தேர்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் கோமாளியாக வந்த ரவீனா சீசன் 5ல் தான் இல்லை என்று கூறியுள்ளார். தற்போது அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஜோடி நிகழ்ச்சியில் பங்கேற்று வருவதாகவும் இதனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாது என்று நினைக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

இப்போது வரை சீசன் 5 கலந்து கொள்ள எனக்கு அழைப்பு வரவில்லை என்றும் அதனால் எனக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் தான் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் மோனிஷா குக் வித் கோமாளி சீசன் 5 கொள்வது கிட்டத்தட்ட உறுதி என கூறப்படுகிறது.

மேலும் புகழ் உள்பட ஒரு சில கோமாளிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மணிமேகலை தொகுப்பாளினியாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாகவும் கூறப்படுகிறது