
இந்தியாவின் புனே அருகில் உள்ள பீமா ஆற்றில் சடலமொன்று மிதப்பதாகப் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் தீவிர சோதனை நடவடிக்கையினை கடந்த நான்கு நாட்களாக முன்னனெடுத்தனர், இதன்போது குறித்த ஆற்றிலிருந்து ஏழு பேரின் சடலங்கள் ஒன்றன் பின் ஒன்றாக எடுக்கப்பட்டது. இதில் ஒருவரின் சடலத்துடன் மொபைல் போன் ஒன்று கண்டெடுக்கப் பட்டதாகவும் அதில் உள்ள படத்தினை அடிப்படையாகக் கொண்டு குறித்த ஏழு பேரும் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்தவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு மீட்கப் பட்டவர்களில் நான்கு பெரியவர்களும் 03 குழந்தைகளும் அடங்குவதாகவும், இவர்கள் அனைவரும் கொலை செய்யப்பட்டுள்ளார்களா அல்லது தற்கொலையா எனச் சந்தேகம் நிலவுவதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பாகத் தீவிர விசாரணை நடைபெறுவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.