யாழ்ப்பாணத்தில் இயங்கும் பிரபல விடுதி ஒன்றின் அறையில்…. இரகசிய வீடியோக் கெமராக்கள்….. அதிரடிக் கைது!!!

இந்த செய்தியை பகிர

யாழ்ப்பாண நகரில் இயங்கிவரும் பிரபல விடுதியில் அதிகளவிலான தூர இடத்திலிருந்து வருகை தருவோர் தங்கிச் செல்வது வழமை, இந்நிலையில் நேற்று கொழும்பிலிருந்து வருகைதந்த இளம் ஜோடி ஒன்று குறித்த விடுதியில் உள்ள ஒரு அறையில் தங்கியுள்ளனர். இரவு இருவரும் தூங்கிக் கொண்டு இருக்கும்போது இரகசிய வீடியோக் கெமரா பொருத்தப்பட்டு வீடியோ பதிவு செய்வதனை அவதானித்தனர், இதனையடுத்து உடணடியாக யாழ் பொலிஸாருக்கு அறிவித்தனர்.

அதற்கமைய குறித்த விடுதிக்கு வருகைதந்த பொலிஸார் குறித்த விடுதியை முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கையினை மேற்கொன்டனர் இதற்கமைய விடுதியின் ஒவ்வொரு அறைகளிலும் வீடியோக் கெமரா பொருத்தப்பட்டுள்ளதனை அவதானித்ததுடன் அங்கிருந்த பணியாளர் ஒருவரை கைது செய்துள்ளதுடன் மேலும் இருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த விடுதியின் உரிமையாளரைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணையினை மேற்கொண்டுள்ளனர்.


இந்த செய்தியை பகிர