களத்தில் இறங்கினால் ஒரு சிங்கம் என்று தான் விராட் கோலியை சொல்லவேண்டும். நடைபெற்று வரும் 2023ம் ஆண்டுக்கான உலகக் கிண்ணப் போட்டியில் இந்தியா தொடர்ந்து 4 தரம் வென்றுள்ளது. இறுதிச் சுற்றை நோக்கி இந்தியா முன்னேற விராட் கோலி ஒரு பெரும் தூணாக அமைந்துள்ளார். முதலில் துடுப்பெடுத்து ஆடிய பங்களாதேஷ் அணி, 256/8 என்ற கணக்கில் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.
இதனைத் தொடர்ந்து ஆடிய இந்திய அணி, அபாரமாக ரன்களை எடுக்க ஆரம்பித்தது. விராட் கோலி மற்றும் ஷெரேயாஸ் ஐயர் ஆகியோர், நிலைகொண்டு நன்றாக ஆட ஆரம்பித்ததால், பங்களாதேஷ் அணி நிலை தடுமாறிப் போய் விட்டது, சிக்ஸ்ஸர்கள் பல அடித்த விராட் கோலி, இறுதியாக சதம் அடித்தார். அவர் மொத்தமாக 103 ரண்களை குவித்து, இந்தியா வெல்ல வித்திட்டார். இதே நிலை நீடித்தால் இந்தியா இறுதிச் சுற்றுவரை செல்லும் வாய்ப்புகள் அதிகம் காணப்படுகிறது.
இம்முறை உலகக் கிண்ணத்தை இந்தியா தட்டிச் செல்ல அதிகம் வாய்ப்பு உள்ளது. ஒரு பலம் மிக்க நல்ல அணியாக உருவாகி, சர்வதேச அணிகளுக்கு பெரும் சவாலாக இந்தியா மாறியுள்ளது. India vs Bangladesh