விஜய்யை வைத்து அ.தி.மு.க.வை காலி செய்ய நினைக்கும் SUN-TV.யின் மாஸ்டர் பிளான்!

விஜய்யை வைத்து அ.தி.மு.க.வை காலி செய்ய நினைக்கும் SUN-TV.யின் மாஸ்டர் பிளான்!

கடந்த சில வாரங்களாக தி.மு.காவின் பிரச்சார பீரங்கிகள், அதிமுகவை தான் குறி வைத்து தாக்கி வருகிறது. புதிய சக்தியாக முளைத்துள்ள த.வே.கா மீது தி.மு.க,  கை வைக்கவே இல்லை. மேடையில் தளபதி விஜய் அவர்கள், ஸ்டாலினை அங்கிள் என்று அழைத்தும் கூட, தி.மு.காவிடம் இருந்து பலமான எதிர்ப்பு எதுவுமே கிளம்பவில்லை. இது ஏன் ? என்று பலரும் சிந்தித்து இருக்கலாம். அதாவது ஒரு நடிகர் சொல்லும் கருத்துக்கு நாம் ஏன் பதில் கூறவேண்டும் ?

தலைவர் விஜய் என்பவர் சினிமா வசனங்களை பேசுகிறார், அவரை நாம் பொருட்படுத்தினால், அவர் பெரிய அரசியல் தலைவராக ஆகி விடுவார். அதனால் அவரை கண்டு கொள்ள வேண்டாம் என்று தி.மு.க தலைமை, கட்சித் தொண்டர்களுக்கு அறிவித்துள்ளதாம். அதாவது விஜய் பற்றிப் பேசி அவரை பெரிய மனிதர் ஆக்க வேண்டாமே என்பது தி.மு.க கொள்கையாக உள்ளது. இதேவேளை அ.தி.மு.காவை திமுக கடுமையாக தாக்க என்ன காரணம் என்றால்.

காரணம் பஜக கூட்டணி தான். மத்திய அரசு, எடப்பாடிக்கு பணத்தை அள்ளி வழங்கும் என்றும். இதனால் 2026 தேர்தலில் எடப்பாடி மற்றும் பஜகாவினர் பணத்தை வாரி இறைத்து பல இடங்களை கைப்பற்ற போகிறார்கள் என்பது தி.மு.க வின் கணக்காக உள்ளது. இந்த நிலையில் மதுரையில் விஜய் நடத்திய மாநாட்டில் அவர், அ.தி.மு.காவை பற்றிய பேசிய விடையங்களை மட்டும் வெட்டி ஒட்டி, சன் TV , செய்திகளை வெளியிட்டு வருகிறது. எதிரியின் எதிரி எனக்கு நண்பன் என்பது போல, தி.மு.க முதலில் விஜயை பாவித்து அதிமுகவை காலி செய்ய நினைக்கிறது.

ஆனால் விஜய் ஒரு நடிகர் தானே, அவருக்கு கூடும் கூட்டம் எல்லாம் வாக்குகளாக மாறாது என்ற தப்புக் கணக்கை போட்டுள்ள திமுக, விஜய் தொடர்பாக அலட்டிக் கொள்ளாமல் இருக்கிறது. ஆனால் மதுரையில் கூடிய கூட்டம், அங்கே மக்கள் நடந்துகொண்ட விதம், இதனை எல்லாம் வைத்துப் பார்த்தால். வெறித்தனமாக இருக்கிறது. இது போக தமிழ் நாட்டில் எப்படி செல்வி ஜெயலலிதாவை “”அம்மா”” என்று அழைத்தார்களோ, அது போல மக்கள் ஸ்டாலினை “”அப்பா””” என்று அழைக்க வேண்டும் என்று தி.முகவினர் பெரும் பாடு பட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில். அதனை உடைக்கவே தவெக தலைவர் விஜய் ஸ்டாலினை “”அங்கிள்”” என்று அழைத்தார்.

இதனால் ஸ்டாலினின் “”அப்பா””” கனவு கலைந்து விட்டது. வெறும் உளவுத் துறையின் அறிக்கையையும், வோட்டுக்கு 2,000/= ரூபாவையும் நம்பியே தி.மு.க தேர்தலில் களம் இறங்குவது வழக்கம். ஆனால் தவெக தலைவர் விஜயிடம் தி.மு.க வைத்திருக்கும் அளவு பணம் இல்லை. இருந்தாலும் மக்கள், அவர்கள் விஜய் மீது கொண்டுள்ள வெறி, இவற்றை வைத்து பார்க்கும் போது த.வெ.க கட்சி கணிசமான இடங்களில் வெற்றிபெற வாய்ப்புகள் உள்ளது. இது போக தமிழ் நாட்டில், “”மதில் மேல் பூனை”” என்ற மக்கள் கூட்டம் ஒரு 2 கோடி மக்கள் உள்ளார்கள். இவர்கள் யார் என்றால், எந்தக் கட்சியையும் சாராத மக்கள். இவர்கள் தான் KING MAKERS.

குறிப்பாக விஜய காந்த் திடீரென எதிர்கட்சி தலைவராக வர இவர்களே காரணம். ஏன் எனில் இந்த வர்கத்தினர், புதிதாக யாரவது வந்தால் சரி வாக்கை போட்டுத் தான் பார்போமே ? இவர் என்ன செய்யப் போகிறார் என்று பார்கலாம் என்று நினைக்கும் மக்கள். இவர்கள் கவனம் தற்போது விஜய் மீது திரும்பியுள்ளது. இதனால் விஜயின் த.வெ.க கட்சி பல இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. 2026 தேர்தல் தமிழகம் என்றும் கண்டிராத ஒரு பெரும் போர் களமாக மாறும். விஜய் திரிஷாவுடன் தனி விமானத்தில் சென்றது தொடக்கம், நடிகை ஜொனாலியாவோடு சுவிஸ் சென்ற விடையம் வரை, அனைத்தையும் தூசி தட்டி கையில் எடுக்கும் தி.மு.க. ஆனால் மக்கள் என்ன செய்யப் போகிறார்கள் ? மில்லியன் டாலர் கேள்வி இதுதான் …