ஹெலியில் பறந்து பறந்து பிரச்சாரம்: விஜயின் அதிரடி முடிவால் ஆடிப்போயுள்ள அனைத்துக் கட்சிகள் !

ஹெலியில் பறந்து பறந்து பிரச்சாரம்: விஜயின் அதிரடி முடிவால் ஆடிப்போயுள்ள அனைத்துக் கட்சிகள் !

TVK தலைவர் விஜய் அவர்கள், மக்களை சந்திக்க செல்வது என்றால் வழி எல்லாம் மக்கள் கூடுவதால் சரியான நேரத்திற்கு அவரால் எங்கேயும் செல்ல முடியவில்லை என்ற நிலை தோன்றியுள்ளது. 3 தொகுதிக்கு செல்ல வேண்டும் என்று திட்டம் தீட்டினால், ஒன்று அல்லது 2 தொகுதிக்கு மட்டுமே செல்ல முடிகிறது. அந்த அளவுக்கு மக்கள் அலை திரண்டு வருகிறது. செல்லும் இடம் எல்லாமே ஆமை வேகத்தில் செல்லவேண்டி உள்ளது.

இதனை திமுக மற்றும் அதிமுக விமர்சிக்க தவறவில்லை. இதனையே ஒரு வீக் பாயிண்டாக வைத்து TVக்களில் விவாதம் நடைபெற்று வரும் நிலையில். எப்படி ஒரு இடத்திற்கு குறித்த நேரத்தில் செல்வது என்று விஜய் தரப்பு தீவிரமாக ஆலோசனை செய்து வந்த நிலையில். முக்கிய தொகுதிகளுக்கு செல்லும் வேளை, ஹெலியை பயன்படுத்தலாம் என்ற , முடிவுக்கு வந்துள்ளது TVK. இதனால் மக்கள் சந்திப்பு நடைபெறும் இடத்திற்கு மிக அருகில் உள்ள பள்ளிக்கூடம் அதில் உள்ள விளையாட்டு மைதானத்தில் ஹெலியை இலகுவாக தரை இறக்க முடியும் என்றும்.

அங்கிருந்து வேகமாக மக்கள் சந்திப்பு மற்றும் பரப்புரை நடக்கும் இடத்திற்கு சென்றுவிடலாம் என்றும் விஜய் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து அடுத்து நடக்கவுள்ள மக்கள் சந்திப்புக்கு விஜய் ஹெலி மூலம் செல்ல வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதேவேளை இதில் உள்ள ஆபத்தையும் கருத்தில் கொள்ள வேண்டி உள்ளது. தேர்தல் நேரத்தில் பிரச்சாரம் செய்ய புறப்பட்ட நடிகை சௌந்தர்யாவுக்கு என்ன நடந்தது என்பது நாம் அறிந்த விடையம். இன்றுவரை அவரது ஹெலி ஏன் விபத்தில் சிக்கியது ? என்ற தகவலே இல்லை. இது ஒரு அரசியல் பழிவாங்கல் என்று கூட கூறப்பட்டது.

ஏப்பிரம் மாதம் 17, 2004ம் ஆண்டு நடிகை சௌந்தர்யா ஹெலி விபத்தில் இறந்து போனார். BJP கட்சிக்காக பரப்புரைக்குச் சென்றவர் பிணத்தை கூட பொலிசாரால் கண்டு பிடிக்க முடியவில்லை. பின்னர் BJP கட்சி கூட அவரைக் கண்டுகொள்ளவே இல்லை. தேடுதலையும் நிறுத்தி விட்டார்கள். இது வரலாறு. எனவே அதிகமாக விமானத்தில் பறப்பது என்பது பல ஆபத்துகளை கொண்டுவரும்.

மக்களை சிரமத்திற்கு ஆளாக்காமல் எப்படி செயல்படுவது என்று TVK தலைவட் விஜய் அவர்கள் இப்படி ஒரு முடிவை எட்டியுள்ளார் என்றால், உண்மையில் அவர் உள்ளம் மிகவும் தூய்மையானது. புதிதாக வந்து தமிழக மக்களுக்கு அவர் ஏதாவது நல்லது செய்தால் சரி. மக்களும் அந்த ஒரு மாற்றத்தை தான் எதிர்பார்க்கிறார்கள்.