நடிகர் விஜய்-யின் அரசியல் வருகை தமிழ்நாட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது கட்சிக்கு எதிராக பாஜக கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளது. தமிழக பாஜக பொதுச் செயலாளர் வினோஜ் பி. செல்வம், “தமிழ் வெற்றி கழகத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்” என்று பேசியது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தி.மு.க.வின் புதிய குழந்தை”:
வினோஜ் பி. செல்வம், விஜயின் அரசியல் உத்திகள் தி.மு.க.வின் பாணியில் இருப்பதாக குற்றம் சாட்டினார். “விஜய், ‘டீப் ஸ்டேட்’டின் புதிய குழந்தை. அவரது அரசியல் தி.மு.க.வின் எதிர்க்கட்சி டூல்கிட்-டை (toolkit) பிரதிபலிக்கிறது” என்று கடுமையாக விமர்சித்தார். தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் வகையில் விஜய் செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
“வெறும் கூட்டம்”:
இந்த விமர்சனங்கள், ஏற்கனவே அரசியல் கட்சிகளிடையே நடந்து வரும் வார்த்தைப் போரை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. ஆளும் தி.மு.க.வும் ஏற்கனவே விஜய்யை “கொள்கை இல்லாத கூட்டம்” என்று விமர்சித்திருந்தது.
பாஜகவின் இந்த அதிரடி தாக்குதல், விஜய்யின் அரசியல் வளர்ச்சிக்கு ஒரு பெரும் சவாலாக பார்க்கப்படுகிறது. எதிர்வரும் நாட்களில் தமிழக அரசியல் களம் மேலும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.