
கடந்த ஜூன் மாதம் 18ம் திகதி அன்று, கனடாவில் உள்ள சரே மாநிலத்தில் ஹார் டீப் சிங் என்ற சீக்கியர் சுட்டுக் கொலைசெய்யப்பட்டார். இனம் தெரியாத துப்பாக்கிதாரிகள், அவரை சரியாக குறிவைத்து சுட்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்ட நிலையில். The Five Eyes (FVEY) is an intelligence alliance, அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா பிரித்தானியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளின் உளவு அமைப்பு கூட்டாக இதனை ஆராயவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.
காரணம் சுட்டுக் கொல்லப்பட்டவர் வேறு யாரும் அல்ல, ஒரு செயல்பாட்டாளர். அவர் இந்தியாவில் சீக்கிய மக்களுக்கு தனி நாடு வேண்டும் என்று போராடும் காலிஸ் தான் அமைப்பின் மிக மிக முக்கியமான ஒரு புள்ளி. இதனால் கனடா உளவுத்துறை இதில் தனது மூக்கை நுளைக்கவேண்டி வந்தது. மேலும் சொல்லப் போனால், கனடாவிற்கு இது ஒரு களங்கம். குறித்த 5 நாடுகளின் உளவுத் துறை அறிக்கைப் படி, இந்திய உளவுத்துறையான “றோ” அமைப்பே இந்தக் குற்றச் செயலை கனடா மண்ணில் அரங்கேற்றியுள்ளது, தெரியவந்துள்ளது.
இது இவ்வாறு இருக்க, கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடர் நேரடியாகவே இந்தியாவை குற்றம் சாட்டியுள்ளது, பெரும் பரபரப்பை தோற்றுவித்துள்ளதோடு. கனடாவில் உள்ள இந்திய தூதுவருக்கு சம்மன் அனுப்பி, அவரை வரவளைத்து தனக்கு , விளக்கம் தருமாறு ரூடர் கோரியுள்ளார். இதனை அடுத்து மோடி, கனேடிய தூதுவரை அழைத்து எனக்கும் விளக்கம் தேவை என்று டெல்லியில், போர் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
அது சரி இந்த ஹர் டீப் சிங் என்ற ஒரு நபருக்காக, ஏன் கனடா ஒட்டுமொத்த இந்தியாவை பகைத்துக் கொள்ளவேண்டும் என்ற கேள்வி உங்களுக்கு இருக்கலாம். கனடாவில் சுமார் 1.2 மில்லியன் சீக்கியர்கள் இருக்கிறார்கள். சொல்லப் போனால், அவர்களால் சுமார் 9க்கும் மேற்பட்ட MPக்களை உருவாக்க முடிகிறது. ஆழும் ரூடர் கட்சிக்கு, ஒரு தூணாக இருப்பது சீக்கியர்கள் தான். இதனால் தான் கனேடிய அரசு, இந்த அளவு இந்தப் பிரச்சனையை பாரதூரமாகப் பார்கிறது. 1980களில் மற்றும் 1990களில் றோ அமைப்பு, இதுபோல இலங்கை வந்து தமிழர் பகுதிகளில் செய்த கொலைகளைப் பற்றி நாம் சொல்லித் தெரியவேண்டிய அவசியம் இல்லை. பாக்கிஸ்தான். பங்களாதேஷ் என்று இவர்கள் எல்லை தாண்டி செய்த பல குற்றச் செயல்கள் உள்ளது. அந்த வகையில் 2023ல் ஹர் டீப் சிங் பலியாகியுள்ளார்.
கனடாவில் பணத்தை சேர்த்து, இந்தியாவுக்கு அனுப்பி அங்கே பஞ்சாபில் ஒரு விடுதலைப் புலிகள் போன்ற போராடும் ஒரு அமைப்பை உருவாக்கி விடுவார் என்பதே இந்தியாவின் அச்சமாக உள்ளது. சுதந்திரம் எங்கே உள்ளது ? இது தான் மிகப் பெரிய ஒரு கேள்விக்குறியாக உள்ளது.
அதிர்வுக்காக,
கண்ணன்