தமிழர்களை கொஞ்சம் கூட மதிக்காத SBI வங்கி- அது போக மத்திய அரசும் கூடவே சேர்ந்துவிட்டது

இந்த செய்தியை பகிர

மத்திய அரசுடன் 4 MPக்கள் போராடியும் தேதியை மாற்ற முடியவில்லை என்ன நிலைமை இது என்பது தெரியவில்லை. பாரத ஸ்டேட் வங்கியின் கிளார்க் பணியாளருக்கான வெற்றிடத் தேர்வு பொங்கல் திகதியான இன்று நடைபெறுகிறது. தமிழர்களின் முக்கிய திருநாளான இன்று, இதனை ஏன் நடத்தவேண்டும் ? இந்த தேர்வில் சுமார் 13,000 ஆயிரம் இளைஞர்கள் கலந்துகொள்ள உள்ள நிலையில். பொங்கல் தினத்தில் நடத்தி இந்த வங்கி அவர்களை பெரும் சிரமத்திற்கு ஆளாக்கியுள்ளது. மேலும்..

4 MPக்கள் இது தொடர்பாக மத்திய அரசுடன் பேசியுள்ளார்கள். அது போகப் பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகளோடும் பேசி உள்ளார்கள். ஆனால் அவர்கள் விட்டுக் கொடுத்த பாடாக இல்லை. பொங்கல் திகதியில் பலர் தமது சொந்த ஊருக்குச் சென்று, உறவுகளோடு நாட்களைக் கழிக்கும் நேரம். அப்பா அம்மாவை பார்க்கச் செல்லும் தருணம். இந்த நேரத்தில் இந்த தேர்வு அவசியமா ? வேறு ஒரு நாளில் வைத்திருக்கலாமே என்று கேட்டால். இல்லை என்று மறுக்கிறார்கள். இதுவே…

தீபாவளி தினத்தில் ஒரு தேர்வை வைத்திருப்பார்களா ? உடனே ராம பக்தர்கள் வந்து தேர்வு நடக்கும் இடத்தை உடைத்து, பாபர் மசூதிபோல நாசம் செய்து இருப்பார்கள். குறைந்த பட்சம் தமிழர்களை மதிக்க இவர்கள் கற்றுக்கொள்ளவில்லை. தமிழர்களின் உணர்வுகள் பாரம்பரியத்தை இவர்கள் மதிக்கவும் இல்லை என்று தான் சொல்லவேண்டும்.


இந்த செய்தியை பகிர