ஷூட்டிங்கில் அக்கப்போரு பண்ணும் நயன்தாரா – தலையில் துண்டு போட்ட தயாரிப்பாளர்!

ஷூட்டிங்கில் அக்கப்போரு பண்ணும் நயன்தாரா – தலையில் துண்டு போட்ட தயாரிப்பாளர்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தார். கேரளா லோக்கல் சேனல் ஒன்றில் முதன் முதலில் ஆங்கராக பணியாற்றி வந்த நயன்தாரா அதன் பின்னர் சினிமா வாய்ப்பு கிடைக்க மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்துவிட்டு தமிழில் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ஐயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

அவர் அறிமுகமான படமே நல்ல அறிமுகத்தை கொடுத்து அவரை பிரபலம் ஆக்கியது. ஐயா படத்தில் அவரின் பவ்யமான நடிப்பும், கிராமத்து பெண் தோற்றமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் தமிழில் பல்வேறு திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. குறிப்பாக பில்லா படத்தில் அவரது மாறுபட்ட வேடம் எல்லோரையும் விழிபிதுங்க வைத்தது. அதில் டூபீஸ் உடையில் கண்களை கவரும் கவர்ச்சி உடைய அணிந்து படு கவர்ச்சியாக நடித்து நடித்து ஒட்டுமொத்த கோலிவுட்டையே அதிரவைத்தார்.

பில்லா படத்தின் வெற்றிக்கு பின் நயன்தாராவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்க பல்வேறு ஹிட் படங்களில் நடித்து வெற்றிகளை குவித்தார். இதனிடையே விக்னேஷ் இயக்கத்தில் ரவுடிதான் படத்தில் நடித்த போது அவரையே காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அதன் பின்னர் வாடகை தாய் முறையில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார். குழந்தை பிறந்த பின்னரும் நயன்தாரா தொடர்ந்து சினிமாவில் நடித்துக் கொண்டே வருகிறார்.

ஆனால், முன்பை காட்டிலும் படிப்படியாக அவரது மார்க்கெட் குறைந்துவிட்டது என்று சொல்ல தான் வேண்டும். காரணம் அவர் அடுத்தடுத்து தோல்வி படங்களில் நடித்தார். கடைசியாக வெளிவந்த அன்னபூரணி திரைப்படமும் அவருக்கு தோல்வியை கொடுத்தது மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கிடையில் வெளிவந்த இந்த படம் வசூல் ரீதியாக தோல்வியை கண்டது. இருந்தாலும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்தவருகிறார் நயன்தாரா.

தொடர்ந்து நயன்தாரா தி டெஸ்ட், மண்ணாங்கட்டி உள்ளிட்ட ஒருசில படங்களில் கமிட்டாகி நடித்தும் வருகிறார்.இதில் மண்ணாங்கட்டி படத்தின் ஷூட்டிங் அவுட்டோரில் நடந்து வருகிறது. ஆனால், அவுட் டோருக்கு எல்லாம் ஷூட்டிங் வரமாட்டேன் என நயன்தாரா அடம்பிடிக்கிறாராம். காரணம், அவுட்டோருக்கு எல்லாம் ஷூட்டிங் சென்றால் தன்னால் பையன்களை பார்த்துக்கொள்ள முடியாது என்பதால் சென்னையிலே ஊட்டி செட் போட்டு எடுங்கள் என்று கண்டீசன் போட்டிருக்கிறார் நயன்தாரா. அவரின் பிடிவாதம் பண்ணதால் சென்னையிலேயே ஊட்டி செட் போட்டுள்ளனர்.

நினைத்ததை சாதித்து அதற்காக ஒரு சப்பைக்கட்டு காரணத்தையும் கூறியிருக்கிறார் நயன்தாரா ஆம், சூட்டிங் நடந்து முடிந்துவிட்டால் போடப்பட்ட செட் அனைத்தையும் எரித்துவிடுவார்கள். அப்படி ஊட்டியில் செய்தால் மொத்த அட்மாஸ்பியரும் பாழாகிவிடும். எனவே அந்த மாதிரியான ஒரு சூழலையே இங்கேயே ஏற்படுத்தி கெடுக்க வேண்டாம் என்ற நினைப்பில் தான் நயன்தாரா இங்கேயே செட் அமைத்து படப்பிடிப்பை நடத்தலாம் என்றும் இதன் மூலம் பட்ஜெட் கூட குறையும் என்றும் கூறியிருக்கிறாராம். ஏம்மா…. உனக்கு ஒரு காரியம் ஆகணும்னு இப்படி உருட்டு உருட்டுன்னு உருட்டுறியேம்மா என பட நெட்டிசன்ஸ் நயனை விமர்சித்துள்ளனர்.