டான் 3 படத்தில் நடிக்க கியாரா அத்வானிக்கு 13 கோடி ரூபாய் சம்பளமா?

டான் 3 படத்தில் நடிக்க கியாரா அத்வானிக்கு 13 கோடி ரூபாய் சம்பளமா?

அமிதாப் பச்சன் நடித்த டான் படத்தை ரீமேக் செய்து நடித்தார் ஷாருக் கான். அந்த படம் வெற்றி பெறவே அதன் இரண்டாம் பாகம் 2011 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. அந்த படமும் நல்ல வெற்றியைப் பெற்றது. அதன் பிறகு இப்போது 13 ஆண்டுகள் கழித்து டான் 3 படம் உருவாக உள்ளது.

இந்த படத்தில் ஷாருக் கானுக்கு பதில் ரன்வீர் சிங் கதாநாயகனாக நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்க உள்ள நிலையில் அவருக்கு சம்பளமாக 13 கோடி ரூபாய் அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பாலிவுட் உலகில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட்டின் இளம் கதாநாயகியான கியாரா அத்வானி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட வருகிறார். 2014இல் வெளிவந்த புக்லி என்ற நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். அதன் பிறகு, லஸ்ட் ஸ்டோரீஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்து புகழ் பெற்றார். இப்போது பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.