The GOAT படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுகிறதா?

The GOAT படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுகிறதா?

விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் The Greatest Of All Time என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர்களின் சகோதரி பவதாரணி மறைவையடுத்து ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. இப்போது மீண்டும் தொடங்கி பாண்டிச்சேரியில் நடந்து வருகிறது.

இந்த படம் ஜூன் 22 ஆம் தேதி விஜய் பிறந்தநாளில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது படத்தின் பணிகள் முடிய தாமதம் ஆகும் என்பதால் 2024 ஆம் ஆண்டு தீபாவளிக்குதான் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. தற்போது வரை 50 சதவீத படப்பிடிப்பு பணிகள் முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.