தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வருவது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல. ஆனால் நடிகராகவும் அதை தாண்டி மக்கள் மனதில் நீடித்து நிலைப்பவராகவும் இருந்தவர்தான் எம்ஜிஆர். இவர் தமிழில் சதிலீலாவதி திரைப்படத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்தார்.
ஆனால் ஆரம்பத்தில் இவருக்கு கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு அமையவில்லை. ஆரம்பத்தில் துணைகதாபாத்திரத்திலேயே நடித்து கொண்டிருந்த எம்ஜிஆர் ராஜகுமாரி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
பின் நாடோடி மன்னன், ரிக்ஷாகாரன், ஆயிரத்தில் ஒருவன், போன்ற பல திரைப்படங்களின் மூலம் பிரபலமானவர். இவர் தனது நிஜ வாழ்வில் மிகச்சிறந்த மனிதரும் கூட. தன்னுடன் இருப்பவர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்பவர். இவர் சினிமாவில் தான் நடிக்கும் படத்தின் மூலம் நல்ல நல்ல கருத்துகளை கொடுப்பவர்.
மேலும் சினிமாவில் பல குணாச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர். இவர் நடிப்பில் 1954ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் மலைகள்ளன். இப்படம் அந்த காலத்தியேலே மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்கப்பட்டது.
இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பானுமதி நடித்திருந்தார். இப்படத்தினை ஸ்ரீராமுலு நாயுடு இயக்கியிருந்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. எம்ஜிஆருக்கு தமிழ் சினிமாவில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தி கொடுத்த அப்டம்தான் மலைகள்ளன். இப்படத்திற்கு பின் தான் எம்ஜிஆர் பல சமூக நீதி கதைகளை தனது படங்களில் கொண்டுவந்தார்.
என்னதான் அக்காலத்தில் பல திரைப்படங்கள் எடுத்திருந்தாலும் இப்படத்தை தழுவி இக்காலத்தில் பல திரைப்படங்கள் இயக்கப்பட்டுள்ளன. மலையூர் மம்பட்டியான், ஜென்டில்மேன் போன்ற பல திரைப்படங்கள் இப்படத்தை தழுவிதான் உருவாக்கப்பட்டுள்ளன. இதெல்லாம் காணாதென்று ரஜினி நடிப்பில் வெளியான சிவாஜி தி பாஸ் திரைப்படமும் இப்படத்தை தழுவியே எடுக்கப்பட்ட கதையாகும். இப்படத்தில் ரஜினி, ஸ்ரேயா, விவேக் போன்ற பல முன்னணி நட்சத்திரங்களும் நடித்திருந்தனர். இப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.