17 வயது ஹரியுடன் உடல் உறவு கொண்ட பெண் இவர் தானா ? ஹரி சொல்லும் நபர்…

இந்த செய்தியை பகிர

தான் தனது 17 வயதில், கன்னித்தன்மையை இழந்தேன். தன்னை விட வயது கூடிய பெண் ஒருவருடன் புல் வெளியில் உடல் உறவு வைத்துக் கொண்டேன் என்று தற்போது ஹரி தெரிவித்துள்ளார். இளவரசர் ஹரி, எழுதியுள்ள சுயசரிதை புத்தகம், இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ள நிலையில். மக்கள் கவனத்தை தன் பக்கம் ஈர்க்க ஹரி தனது வாழ்கையில் நடந்த பல விடையங்களை உளறி வருகிறார். அந்த வகையில்..

தற்போது தன்னைப்பற்றிய பரம ரகசியம் ஒன்றையும் போட்டு உடைத்துள்ளார். அன்றைய தினம் எனக்கு 17 வயது நான் விஸ்கி அருந்தி இருந்தேன். பின்னர் ஒரு பப்புக்கு சென்று இருந்தேன். ஆனால் அங்கே குடிக்கவில்லை. பின்னர் ஒரு பெண் என்னை உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்தார். அவரை நான் அழைத்துக் கொண்டு வெளியே சென்றேன். பப்புக்கு பின்னால் உள்ள, புல்வெளி ஒன்றில் நாம் உடல் உறவில் ஈடுபட்டோம் என்று தெரிவித்து உள்ளார்.

இதில் என்ன சிக்கல் இருக்கிறது என்றால், 18 வயதுக்கு குறைந்த நபர்களோடு உறவு வைத்திருப்பது சட்டப்படி குற்றம். அது போக 18 வயதுக்கு குறைந்த நபர்கள் குடிக்கவும் கூடாது. அப்படிப் பார்த்தால் இளவரசர் ஹரி அனைத்து பிரித்தானிய சட்ட திட்டங்களையும் மீறியுள்ளார். அது போக எப்படியோ மோப்பம் பிடித்த மீடியாக்கள், அவருடன் உறவில் இருந்த பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்கள். ஆனால் அந்தப் பெண், ஹரி தன்னை முத்தமிட்டார் வேறு எதுவும் நடக்கவில்லை என்று அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார்.


இந்த செய்தியை பகிர